Thursday 26 March 2015

தோற்றது ஒரு அணியே ஒழிய நாடு அல்ல






நம்ப கூட பிறந்த தம்பியோ இல்லை மகனோ பக்கத்து தெருவில் உள்ள பசங்களோட கிரிக்கெட் ஆடி தோத்தால் நம்ப கவலையே பட மாட்டோம். தோத்த நம்ப தம்பி, மகன் முதற்கொண்டு. ஆனால் இந்தியன் டீம் தோத்தால் மட்டும் அப்டியே கண்ணுலேந்து லிட்டர் கணக்குல தண்ணி ஊத்தர்து. முதலில் இந்தியா ஜெய்க்கனம்னு சாமி கும்பிட வேண்டியது. தோத்துர்த்துனால் சாமியை திட்ட வேண்டியது. சாமிக்கு வேற வேலையே இல்லையா. விளையாட்ட விளையாட்டா முதலில் எடுத்துகோங்கப்பா. இந்தியா என்ன யுத்தத்திலா தோற்றது. கிரிக்கெட் ஒண்னும் நமது நாட்டின் மான பிரச்சனை அல்ல. 

 இந்தியா மூன்றாம் முறையாக உலக கோப்பை வென்றால் அதன் மூலம் நமது நாட்டின் பொருளாதாரம் உயர்ந்து விடுமா, பண வீக்கம் குறைந்து விடுமா, விவசாயிகளின் பிரச்சனைகள் தீர்ந்து விடுமா. நாம் மற்ற அனைத்து விளையாட்டுக்களை விட கிரிக்கெட்ட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து விட்டோம். தடகள பிரிவில் ஐந்து தங்கம், ஆறு வெள்ளி, ஒரு வெண்கலம் என்று asian games சில் வென்ற சாந்தியை பொம்பளையே கிடையாதுனு ஒரு கூட்டம் சொல்லித்தே ஏன்? சாந்தியின் வாழ்க்கையை வெய்த்து தானே சிவ கார்த்திகேயன் நடித்த எதிர் நீச்சல் படம் எடுக்கப்பட்டது. குற்றாலீஸ்வரன் திறமை சரியாக அங்கீகரிக்கப்பட்டு இருந்தால் அவர் மூலம் பல தங்கங்கள் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு கிடைத்து இருக்கும். ஆனால் அங்கீகரிக்கப்படவில்லை. சாந்தி, குற்றாலீஸ்வரன் போன்ற திறமையான வீர, வீராங்கனைகள் இரண்டு தவறுகளை செய்துள்ளார்கள். அவர்கள் ஆதிக்க ஜாதியில் பிறக்காதது முதல் தவறு, கோடீஸ்வரனுக்கு மகனாக, மகளாக  பிறக்காதது இரண்டாம் தவறு. 

2008 சைனாவில் நடந்த ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் போட்டியில் அபினவ் பிந்த்ரா தனி நபர் பிரிவில் தங்கம் வென்றாரே அது சாதனை. கிரிக்கெட்டில் வெல்ல திறமை மட்டும் அல்ல. அதிர்ஷ்டமும் வேண்டும். ஆனால் குறி பார்த்து சுடுதலில் வெல்ல திறமை மட்டுமே தேவை. ஒலிம்பிக்கில் தனி நபர் பிரிவில் இந்தியா பெற்ற முதல் தங்கம் அது. நடிகர் தலை வாசல் விஜய்யின் மகள் ஜெய வீணா  தேசிய அளவில் நடந்த நீச்சல் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். ஷிவானி எண்ணும் மூன்று வயது பெண். வில் வித்தையில் பல வித்தைகள் செய்கிறார். லிம்கா புத்தகத்தில் இடம் பெற்ற சாதனை பெண். 

கிரிக்கெட்டில் இந்தியா தோற்றதை நினைத்து கவலைப்படுவதை விட  இனி ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு ஒளி மயமான எதிர்காலம் இருக்கிறது என்று நினைத்து ஆனந்தப்படுங்கள். மற்ற விளையாட்டை போல் கிரிக்கெட்டும் ஒரு விளையாட்டு அவ்வளவே. கிரிக்கெட் ரசிகனாக இருங்கள். ஆனால் வெறியனாக இருக்காதீர்கள். 

 தோற்றது ஒரு அணியே ஒழிய நாடு அல்ல. 

Friday 13 February 2015

காதலர்களுக்கு பரிசு.




1] பொற்கோயில் வீதியிலே வைர மணி தேரினிலே
பவனி வரும் மாணிக்க பைங்கிளியே.

2] பொதிகை மலை சாரல் போலே
தேன் சிந்தும் தூறல் போலே
வண்ண முத்து சிதறல் போலே
அன்ன முத்து அழகு போலே
வந்த வானத்து தேவதையே.
மாயவன் குழல் போலே


3] மாயவன் குழல் போலே
கற்கண்டு கடல் போலே
பாடும் காண பொற் குயிலே.
கோடி மயில் தோகை போலே


4] கோடி மயில் தோகை போலே
கோடி நிலவு அழகு போலே
கோடி பல்லவன் சிற்பம் போலே
வந்த தோடி ராகமே.

 பின் குறிப்பு. நான் இதுவரை எந்த பெண்ணையும் காதலிக்கவில்லை. ஒரு கவிங்கன் என்கிற முறையில் இந்த கவிதையை எழுதினேன். வெறும் உடலை மட்டும் நேசிக்காமல் உள்ளத்தையும் நேசிக்கும் உண்மை காதலர்களுக்கு காதல் பரிசாக இந்த கவிதையை தருகிறேன்.

 by HV Krishna Prasad.


Sunday 8 February 2015

காதல் சரியா? தவறா





ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14 நெருங்க, நெருங்க அந்த நாளிர்க்கு மிக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பெரிய அளவில் நெகட்டிவ் பப்லிஸிடீ செய்வது மத வெறி அமைப்புகள் தான். அனைத்து மத வெறி அமைப்புகளையும் தான் நான் சொல்கிறேன். ராமாயணம், மஹா பாரதம் முதலான இதிகாசங்களில் ஆரம்பித்து தொல்காப்பியம், ஐம்பெரும் காப்பியம் என்று எதிலுமே காதல் என்பது உயர்வான ஒன்றாக தான் சொல்லப்பட்டு இருக்கிறது. வள்ளுவர் முதல் வள்ளலார், வாரியார் வரை அனைவரும் காதலை போற்றி தான் இருக்கிறார்கள். நவ வித பக்தியில் கடவுளை காதலனாக, காதலியாக நினைத்து வணங்குவதும் ஒன்று. ஆழ்வார்கள் நாயகா, நாயகி பாவங்களில் பெருமாளை அதிகமாக மங்களாசாசனம் செய்து உள்ளனர்.

வள்ளுவர் கூறியதை போல் இன்று நடக்கும் காதல்கள் தெய்வீக காதலா என்று நீங்கள் கேட்கலாம். ஒரு சில காதலர்கள் அநாகரீகமாக பொது இடங்களில் நடந்து கொள்வதை வெய்த்து எவ்வாறு காதலே தவறு என்று சொல்லலாம். ஒரு சில சாமியார்களும், ஆன்மீக வாதிகளும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக ஊரில் உள்ள வழிபாட்டு ஸ்தலங்களை எல்லாம் இழுத்து மூடி விட முடியுமா. அதை போல் தான் முட்டாள் தனமாக இருக்கிறது இந்த மதவெறி அமைப்புகள், மற்றும் கலாச்சார பாதுகாவலர்கள் என்று தங்களை தாங்களே சொல்லி கொள்பவர்களின் செயல்பாடுகள்.

காதல் என்பது இயற்கையாக பருவ வயதில் வரும் ஒரு உணர்வு. இறைவனின் படைப்புகளில் அதுவும் ஒரு இயற்க்கை நியதி. இறைவனின் நியதிகளை எதிர்ப்பது இறைவனையே எதிர்ப்பதற்கு சமம் அல்லவா. சிலருக்கு காதல் என்னும் உணர்வு வராமலேயே போகலாம். உதாரணத்திற்கு என்னை எடுத்து கொள்ளுங்கள். எனக்கு வயது 27. பல ஆயிரம் பெண்களை நான் இதுவரை பார்த்துள்ளேன். ஆனால் யார் மீதும் எனக்கு காதல் வந்ததில்லை. பக்கத்து வீட்டில் இருப்பவன் காதலித்தாலே அதை தவறு என்று கூறும் உரிமை எனக்கு இல்லை. அவ்வாறு இருக்க. யார் என்றே தெரியாத, பீச், பார்க்கில் காதலிப்பவர்களுக்கு எதிராக கோசம் போடவும், அவர்களை தாக்கவும் உங்களுக்கு என்ன? உரிமை இருக்கிறது.

மதம் என்பது நம்மை போன்ற மனிதர்களுக்கு மட்டுமே உண்டு. ஆனால் காதல் என்பது ஈ, எறும்பு, காக்கா, குருவினு எல்லா உயிரினங்களுக்கும் இருக்கு.

காதல் சரியா? தவறா? என்று கேட்டால் உங்களுக்கு சரியென்று பட்டால் சரி, தவறு என்று பட்டால் தவறு. ஆனால் உங்களது தனிப்பட்ட கொள்கை நெறிகளை, வெறிகளை பிறர் மீது திணிக்கும் உரிமை உங்களுக்கு இல்லை. இன்று உங்கள் வாரிசுகளே அதை ஏற்க்க மாட்டார்கள். சமுதாயம் எவ்வாறு? ஏற்க்கும்.

அனைத்து காதலர்களுக்கும் எனது அட்வான்ஸ் காதலர் தின வாழ்த்துக்கள், drowsar, வெள்ளை அங்கி, லுங்கி என்று பலவித யூநிஃபார்ம்மில் காதலர் தினத்தை எதிர்க்கும் பல்வேறு மதவெறி அமைப்புகளுக்கு என் டபுள் காதலர் தின வாழ்த்துக்கள்.

குழாய்யை காணோம்.


சீன தேசத்து ஞானிகளில் முதன்மையானவர் கன்பூஷியஸ். இவருக்கு பல சீடர்கள். அதில் ஒருவர் தான் சாங்- ஹோ - சாங்க். தமது குருவிடமிருந்து பல கலைகளை கற்றவர். இயற்பியல், எந்திரவியல் வல்லுநர்.

ஒருமுறை அறிங்கர் சாங் கிராம புறத்தில் உலாவ சென்றார். வழியில் ஒரு அழகான பழத்தோட்டம் கண்டு உள்ளே நுழைந்தார். Six Pack உடம்புடன் ஒரு இளைங்கர் கிணற்றில் இருந்து தன்னீர் இறைத்து கொண்டிருந்தார். வாளி [ பக்கெட் ] ரொம்பியதும் தன்னீரை நிமிர்ந்து எடுக்காமல் குனிந்து, முதுகை வளைத்து எடுக்கும் அமைப்பில் அந்த விவசாயி வீட்டு கிணறு இருந்த்து. பாவம் இப்படி மாடாய் உழைத்தால் இவனது ஆரோக்யம் சீக்கிரமே கெட்டு விடுமே. இளமையிலேயே கூன் விழுந்து இவன் கிழவன் போல் ஆகி விடுவானே என்று சாங் வருந்தினார்.

பின்னர் அந்த இளைங்கனை சந்தித்து, இந்த கிணற்றின் இரண்டு பக்கமும் தூண் போல் அமைத்து நடுவில் ஒரு கம்பியை பொருத்தி, அதில் ஒரு கொக்கியை பொருத்தி அதில் இதே பக்கெட்டை தொங்க விட்டு நீ நீரை இறைத்தால் உனக்கு சிரமம் தெரியாது என்று விளக்கினார். அதோடு மறுநாள் அவரே அதை செய்தும் கொடுத்தார்.

அந்த விவசாயிக்கு இது புதுசு. எவ்வாறு இதில் தன்னீர் இறைப்பது என்று தெரியாமல் குழம்பினார். சுமார் 2400 ஆண்டுகளுக்கு முன் இது கூட ஒரு அறிவியல் விந்தை அல்லவா. சாங் அதில் எவ்வாறு தன்னீர் இறைப்பது என்று செய்து காட்டினார். பின்னர் அந்த விவசாயி மிகுந்த மகிழ்வுடன் தன்னீர் இறைக்கலானார். இது உண்மையில் நல்ல விசயம் தான். இதோடு சாங் நிறுத்தி இருக்கலாம். இதன் பின்னர் அவர் செய்த சில அறிவியல் விந்தைகள், அந்த விவசாயிக்கு ஆபத்தாக முடிந்தது.

மறுநாள் மாலை சாங் அந்த தோட்டத்திற்கு வந்தார். விவசாயி அவரை வணங்கி வரவேற்று அமர செய்தார். விவசாயி தண்ணீர் இறைக்கும் சிரமமும், நேரமும் முன்பை விட குறைந்தது. ஆனாலும் சில குறைகள் இருப்பது சாங்கின் அறிவியல் கண்ணிற்க்கு தெரிந்தது. ஒவ்வொரு முறையும் அவர் பக்கெட்டை கிணறுக்குள் இறக்கி, தண்ணீர் எடுத்ததும் கயிற்றிலிருந்து பக்கெட்டை கழட்டி எல்லா செடிகளுக்கும் தண்ணீர் விட்டு மறுபடியும் மாட்டி, மறுபடியும் கழட்டி, மறுபடியும் மாட்டி, மறுபடியும் கழட்டி, மறுபடியும் மாட்டி, கழட்டி, மாட்டி, கழட்டி, மாட்டி. இவ்வாறு கழட்டி, மாட்டும் வேலை மற்றும் நீர் விடுவதற்கு என்று கிணற்ரிற்க்கும், தோட்டத்திற்கும் இடையில் நடக்கும் வேலைக்கு முற்றுப்புள்ளி வெய்க்க வேண்டும் என்று சாங் நினைத்தார். அந்த விவசாயியை மண்வெட்டியை கொண்டு வர சொன்னார்.

கிணற்றின் அடியில் இருந்து தோட்டம் வரை செல்லும் ஒரு கால்வாய் அவர் அமைத்தார். அதன் பின் அந்த விவசாயி நின்ற இடத்தில் இருந்தே நீரை இறைத்து, அந்த கால்வாயில் ஊற்றினார். அவருக்கு நடக்கும் வேலையும் இல்லாமல் போனது, கழட்டி மாட்டும் வேலையும் இல்லாமல் போனது. ஒரு வருடம் கழித்து.

இதற்க்கு முன் இல்லாத அளவு அமோக விளைச்சல், லாபம். அதற்க்கு நன்றி செலுத்தும் விதமாக பெரும் தொகையுடன் சாங் ஆசிரமத்திற்கு விவசாயி அவரது மனைவி இருவரும் வந்தனர். துறவியை வணங்கினர். பக்தனுடைய இந்த காணிக்கையை நீங்கள் ஏற்று கொள்ள வேண்டும் என்று சாங் முன் பணத்தை நீட்ட. அவர் அதை வாங்கி கொள்ள வில்லை. பணமும், துரும்பும் துறவிக்கு ஒன்று தான். அந்த பணத்தில் ஒரு சிறு பகுதியை செலவழித்தால் தோட்டத்தில் ஒரு குழாய் வெய்த்து அதன் மூலம் நீர் இறைக்கும் வேலையும் செய்யாமல் அந்த உழைப்பு, அதற்கான நேரத்தையும் மிச்சப்படுத்தலாம் என்று சொல்ல உடனே ஒரு பைப் connection கொடுக்கப்பட்டது.

முதலில் அந்த விவசாயிக்கு குனியும் வேலை போனது, பின்னர் நடக்கும் வேலை போனது. இப்போ பைப் connection மூலம் நீரை இறைக்கும் வேலையும், அதை கால்வாயில் ஊற்றும் வேலையும் போனது. தோட்டத்தை பெருக்குவது விவசாயி மனைவியின் வேலை. நல்ல வேளை. சாங் வேக்கம் க்லீநர் கண்டுபிடிக்கவில்லை. சில வருடங்கள் கழித்து.

பல ஊர்களுக்கு சுற்று பயணம் செய்த சாங் தனது மடத்திற்கு திரும்பினார். இரண்டு நாட்கள் கழித்து அந்த விவசாயியின் தோட்டத்திற்கு சென்றார். அங்கு அவர் கண்ட காட்சிகள் அவரை திகைப்படைய செய்தது. நாம் வேறு இடத்திற்க்கு மாறி வந்து விட்டோமா என்று குழம்பினார். நடக்கும் பாதைகளில் கூட செடிகள் தாறு மாறாக வளர்ந்து இருந்தது. புதர்கள், முட் செடிகள், அழுகிய நிலையில் கிளைகளில் தொங்கும் பழங்கள். அப்பொழுது யாரோ இரும்பும் சத்தம் கேட்டது. பார்த்தால் சும்மா six pack உடலுடன் சிறுத்தை மாதிரி இருந்த விவசாயி உடல் பலம் சிறுத்து, உடம்பு மிக பெருத்து, தொந்தியும், தொப்பையுமாக கயிற்று கட்டிலில் படுத்து இருந்தார். அருகில் விவசாயியின் மனைவி. விவசாயியின் அந்த நிலமையை கண்ட சாங் மனம் அதனால் மேலும் வருத்தம் அடைந்தது.

சாங்கை பார்த்ததும் விவசாயி எழுந்து கை கூப்பினார். விவசாயியின் மனைவி சாங்கை முறைத்து ஒரு பார்வை பார்த்தாள். அவள் பார்வையிலேயே நம் மீது இவளுக்கு ஏதோ கோபம் என்பது அவருக்கு புரிந்தது. ஆனால்? கோபத்திற்கான காரணம் புரியாதவராய் சாங்கை பார்த்து. உனக்கு எதனால் இந்த நிலமை. நீ வேறு ஏதேனும் கடின வேலை செய்ததால் உனக்கு இந்த மாதிரி ஆய்டுத்தா. சொல். அந்த உழைப்பையும் குறைக்க நான் எதாவது உபாயம் செய்கிறேன் என்று சொல்ல, அருகில் இருந்த விவசாயியின் மனைவி அய்யா, உபாயம்ங்கர பேர்ல நீங்க இதுவரை செய்த அபாயங்கள் எல்லாம் போதும். இவர் கடினமாக உழைத்ததால் இப்படி ஆகவில்லை. உழைப்பதை நிறுத்தியதால் தான் இவ்வாறு ஆனார் என்று சொல்ல, அப்பொழுது தான் சாங்கிற்க்கு அவள் கோபத்திற்கான காரணம் புரிந்தது. அவள் மேலும் பேசலானாள்.

இதற்க்கு முன் இவர் உடம்பிலிருந்து வெள்ளமாக வேர்வை வரும் அளவு உழைத்தார். அதில் இவர் உள் உடம்பு நல்லா சுத்தம் ஆச்சு, பாத்தி கட்டி நல்லா ஃபுல் மீல்ஸ் சாப்ட்ட மனுசன். படுத்த உடனேயே தூங்கிய என் புருசன். இப்போ இவர் உடம்பு வேர்ப்பதில்லை, சரியாக சாப்பிடுவதில்லை, போன வருடம் சாப்பிட்ட சாப்பாட்டில் கால் பங்கு கூட இந்த வருடம் இவர் சாப்பிடவில்லை. அப்டி கம்மியா சாப்ட்டே அஜீரண கோளாறு, தூக்கம் வராமல் தவிப்பு, இது எல்லாம் சேர்ந்து தான் இன்று இவரை இந்த நிலைக்கு ஆக்கியது என்று அவள் சொல்லி முடித்ததும். சாங் அப்டியே அமைதி ஆனார். சாங் தன்னுடைய தவறுக்கு மன்னிப்பு கேட்டது மட்டுமில்லாமல் தனக்கு ஞானம் புகட்டிய அந்த ஞான பெண்ணை தனது குருவாக ஏற்று கொண்டார்.

மூன்று மாதம் கழித்து. விவசாயி பழைய தெம்புடன் உழைக்கலானார். கிணறு இருந்தது, கிணற்றின் இரண்டு பக்கமும் தூண் இருந்தது, இரண்டு தூண்களுக்கு நடுவில் கம்பி, கம்பியில் கொக்கி, கொக்கியில் வாளி, கீழே கால்வாய் எல்லாம் இருந்தது. ஆனால் குழாய்யை காணோம்.

மனிதனுடைய உடல் உழைப்பு, நேரம் முதலியவற்றை குறைக்க எந்திரங்கள் தேவை தான். ஆனால் உயிர் அற்ற எந்திரங்களையே ஒரு மனிதன் முழுமையாக சார்ந்து இருந்தால், உயிர் உள்ள மனித எந்திரம் ரிப்பேர் ஆய்டும். சும்மாவா சொன்னார் திருமூலர். மனமே மந்திரம், உடலே எந்திரம். அன்று உணவே மருந்து. இன்று மருந்தே உணவாக இருக்கு. அன்று நம்முடைய அன்றாட வேலைகளே உடற் பயிற்சியாக இருந்தது. இன்று உடலுக்கு என்று தனியாக பயிற்ச்சி தேவைப்படுகிறது. கடின வேலைகள் செய்வதை விட, தலை முதல் தோள், மார்பு, கை, வயிறு, இடுப்பு, கால் என்று உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பிற்க்கு என்று பிரத்யேகமாக பயிற்சிகள் செய்வது சிறந்தது தான். தினமும் ஒரு அரை மணி நேரமாது உடற் பயிற்ச்சி செய்யுங்கள். நோயின்றி வாழுங்கள். நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம்.

Tuesday 3 February 2015

தாயும், வாயும் ஒன்னு





நம்ப உடம்புல தலை, கண், காது, மூக்கு, பல்லு, வயிறு, கை, கால்னு எது வலிச்சாலும் அதுக்காக வாய் தான் கத்தும். தாயும் வாய் மாதிரி தான். நமக்கு எதாவது ஒண்ணுனா நம்ப கூட பெரிசா கவலைப்பட மாட்டோம். தாய் மனசு தான் அதுக்காக துடிக்கும்.

Wednesday 28 January 2015

வெற்றி என்பது


வெற்றி என்பது. சரியான நேரத்தில், சரியான வார்த்தையை, சரியான இடத்தில் பேசுவதே ஆகும். 

ஒரு சிறிய உவமை. ராவணனின் தம்பி கும்பகர்ணன் பிரும்மாவை காண தவம் பண்ணான். அவர் வந்தார். உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். எனக்கு அழியாத வாழ்க்கை வேண்டும். நித்தியத்துவம் வேண்டும் என்று கேட்பதற்க்கு பதிலாக நித்திரைத்துவம் வேண்டும். அதாவது அழியாத தூக்கம் வேண்டும்னு கேட்டான். அவரும் அப்டியே ஆகட்டும்னு வரம் கொடுத்துட்டு பெய்ட்டார். அதன் பின்னர். அவன் ஆறு மாதம் சேர்ந்தாப்ல தூங்குவான். பின்னர் மீதி ஆறு மாதம் தின்னுன்டே இருப்பான். டங்க் கொஞ்சும் ஸ்லிப் ஆனதுல எல்லாம் டோட்டல்லா மாறி போச்சு பார்த்தீங்களா. 

 இது புராணம். சரித்திரத்திலும் இதேபோல் சிறு அளவு கவனம் சிதறி பேசிய வார்த்தைகளுக்கு பெரிய அளவில் விளைவுகள் வந்து இருக்கிறது. அதனால் தான் பெரியவர்கள் சொன்னார்கள். ஒரு வார்த்தையை நமது நாவு பேசுவதற்க்கு முன் நமது மனம் அதே வார்த்தையை பத்து முறையாவது பேசி பார்க்க வேண்டும். 

 சிறிய தவறுகளுக்கும் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இடம் கொடுத்து விடாதீர்கள். சிறிய ஓட்டை, பெரிய கப்பலையே மூழ்கடித்து விடும். 

 பெஞ்சமின் பிராங்களின். 

வடை போச்சே


அமெரிக்காவில் ஒரு பெரிய இன்ச்யூரன்ஸ் கம்பனி. அதில் ஏஜண்ட்டாக இருக்கும் ஒருவரிடம் பல லக்சம் டாலர் பாலிஸீ எடுக்க ஒரு பெரிய பணக்காரர் முன் வந்தார். அதற்க்கு தேவையான விசயங்களை டைப் பண்ணி, நல்லா ப்ளான் பண்ணி அந்த பணக்காரர் வீட்டுக்கு அந்த ஏஜென்ட் போனார். அந்த பணக்காரர் அதில் கை எழுத்து போட தன்னோட கட்டை பேனாவை இங்க்ல முக்கினார். அது பேனா கண்டுபிடிக்கப்படாத காலம். இன்று ட்ராயிங்க் வரைபவர்கள் கலர் பாக்ஸ்சில் பிரஷ்சை தோய்த்து வரைவதை போல் தான் அன்று எழுதினார்கள். அந்த பணக்காரர் மையில் தனது கையை வெய்த்த அந்த நொடி. அந்த ஏஜென்ட்க்கு கையும் ஓடலை, காலும் ஓடலை. கால் மட்டும் தான ஓடும். கை எப்டியா ஓடும். யாரோ மைன்ட் வாஸ்ல நினைக்கர்து எனக்கு கேக்கர்து. உங்க மைன்ட் வாய்ஸ்ச நான் catch பண்ணிட்டேன். பார்த்திபன் வடிவேல் கிட்ட கேள்வி கேட்கற மாதிரிலாம் கேட்காமல் கதையை படிங்க. அந்த insurance ஏஜென்ட் அப்டியே இன்ப வெள்ளத்தில் மிதந்தார். 1840 இல் அன்றைய விலை வாசியில் பல லக்சம் டாலர்க்கு ஒருவர் பாலிசி எடுக்கிறார் என்றால் அது சாதாரண விசயமா. எந்த ஏஜென்ட்க்கும் கிடைக்காத ஜாக் பாட் நமக்கு கிடைத்து இருக்கு. நம்ப லைஃப் ஸ்டைல்லே மாற போர்து. நம்ப எங்கயோ..... போக போறோம் அப்டினு அவர் நினைத்த நேரத்தில் என்ன? நடந்தது தெரியுமா. 

 அந்த கட்டை பேனாவை மையில் முக்கி வெளியே எடுக்கும் பொழுது. அளவுக்கு அதிகமாக இங்க் வெளியே வந்து, கையெழுத்து போடும் பேபர்ல கொட்டி விட்டது. அதுல அந்த பணக்காரர் அப்டியே ஷாக் ஆய்ட்டார். ஏஜென்ட் அதுக்கு மேல ஷாக் ஆய்ட்டார். ஏஜென்ட் படபடப்புடன். ஒரு அரை மணி நேரம் டைம் கொடுங்க ஸார். இதே மாதிரி இன்னொரு பேப்பர் ரெடீ பண்ணிடறேன். 

 கோடீஸ்வரர்- சாரி. நான் பாலிசி எடுத்துக்கர முடிவை ட்ராப் பண்ணிடறேன். சகுனம் சரியில்லை. சென்டிமென்டல்லி எனக்கு இது வேணாம்னு படர்து. 

முதலில் ஒரு மிக பெரிய வாய்ப்பு தனக்கு கைக்கு எட்டி, வாய்க்கும் எட்டி, வயிற்றுக்குள் போகும் நேரத்தில் அது நழுவி போச்சேனு வருத்தப்பட்டார். பின்னர், இவ்வாறு இங்க்கை தோய்த்து எழுதாமல், பேனாவுக்கு உள்ளிருந்தே இங்க் வருவதை போல் ஒரு பேனா கண்டு பிடித்தால் என்ன என்று கன நேரத்தில் அந்த ஏஜென்ட்  மனத்தில் ஒரு மகா சிந்தனை உதயமாகியது. அதன் மூலம், சாதாரண insurance ஏஜென்ட்டாக இருந்த அவர் விஞ்ஞானி ஆனார். Fountain Pen னை கண்டு பிடித்தார். 


 நாம் உபயோகிக்கும் ஒவ்வொரு பொருளுக்கும். அது சிறிய பொருளாய் இருந்தாலும் அதற்க்கு என்று ஒரு சீறிய வரலாறு இருக்கும். அது உருவானதற்க்கு ஒரு சுவாரஸ்யமான காரணம் இருக்கும். 

 இன்றும் Waterman கம்பனி pen. உலக அளவில் பிரபலமான, விலை உயர்ந்த ஒன்று.