Sunday, 8 February 2015

காதல் சரியா? தவறா





ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14 நெருங்க, நெருங்க அந்த நாளிர்க்கு மிக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பெரிய அளவில் நெகட்டிவ் பப்லிஸிடீ செய்வது மத வெறி அமைப்புகள் தான். அனைத்து மத வெறி அமைப்புகளையும் தான் நான் சொல்கிறேன். ராமாயணம், மஹா பாரதம் முதலான இதிகாசங்களில் ஆரம்பித்து தொல்காப்பியம், ஐம்பெரும் காப்பியம் என்று எதிலுமே காதல் என்பது உயர்வான ஒன்றாக தான் சொல்லப்பட்டு இருக்கிறது. வள்ளுவர் முதல் வள்ளலார், வாரியார் வரை அனைவரும் காதலை போற்றி தான் இருக்கிறார்கள். நவ வித பக்தியில் கடவுளை காதலனாக, காதலியாக நினைத்து வணங்குவதும் ஒன்று. ஆழ்வார்கள் நாயகா, நாயகி பாவங்களில் பெருமாளை அதிகமாக மங்களாசாசனம் செய்து உள்ளனர்.

வள்ளுவர் கூறியதை போல் இன்று நடக்கும் காதல்கள் தெய்வீக காதலா என்று நீங்கள் கேட்கலாம். ஒரு சில காதலர்கள் அநாகரீகமாக பொது இடங்களில் நடந்து கொள்வதை வெய்த்து எவ்வாறு காதலே தவறு என்று சொல்லலாம். ஒரு சில சாமியார்களும், ஆன்மீக வாதிகளும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக ஊரில் உள்ள வழிபாட்டு ஸ்தலங்களை எல்லாம் இழுத்து மூடி விட முடியுமா. அதை போல் தான் முட்டாள் தனமாக இருக்கிறது இந்த மதவெறி அமைப்புகள், மற்றும் கலாச்சார பாதுகாவலர்கள் என்று தங்களை தாங்களே சொல்லி கொள்பவர்களின் செயல்பாடுகள்.

காதல் என்பது இயற்கையாக பருவ வயதில் வரும் ஒரு உணர்வு. இறைவனின் படைப்புகளில் அதுவும் ஒரு இயற்க்கை நியதி. இறைவனின் நியதிகளை எதிர்ப்பது இறைவனையே எதிர்ப்பதற்கு சமம் அல்லவா. சிலருக்கு காதல் என்னும் உணர்வு வராமலேயே போகலாம். உதாரணத்திற்கு என்னை எடுத்து கொள்ளுங்கள். எனக்கு வயது 27. பல ஆயிரம் பெண்களை நான் இதுவரை பார்த்துள்ளேன். ஆனால் யார் மீதும் எனக்கு காதல் வந்ததில்லை. பக்கத்து வீட்டில் இருப்பவன் காதலித்தாலே அதை தவறு என்று கூறும் உரிமை எனக்கு இல்லை. அவ்வாறு இருக்க. யார் என்றே தெரியாத, பீச், பார்க்கில் காதலிப்பவர்களுக்கு எதிராக கோசம் போடவும், அவர்களை தாக்கவும் உங்களுக்கு என்ன? உரிமை இருக்கிறது.

மதம் என்பது நம்மை போன்ற மனிதர்களுக்கு மட்டுமே உண்டு. ஆனால் காதல் என்பது ஈ, எறும்பு, காக்கா, குருவினு எல்லா உயிரினங்களுக்கும் இருக்கு.

காதல் சரியா? தவறா? என்று கேட்டால் உங்களுக்கு சரியென்று பட்டால் சரி, தவறு என்று பட்டால் தவறு. ஆனால் உங்களது தனிப்பட்ட கொள்கை நெறிகளை, வெறிகளை பிறர் மீது திணிக்கும் உரிமை உங்களுக்கு இல்லை. இன்று உங்கள் வாரிசுகளே அதை ஏற்க்க மாட்டார்கள். சமுதாயம் எவ்வாறு? ஏற்க்கும்.

அனைத்து காதலர்களுக்கும் எனது அட்வான்ஸ் காதலர் தின வாழ்த்துக்கள், drowsar, வெள்ளை அங்கி, லுங்கி என்று பலவித யூநிஃபார்ம்மில் காதலர் தினத்தை எதிர்க்கும் பல்வேறு மதவெறி அமைப்புகளுக்கு என் டபுள் காதலர் தின வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment