இந்தியா மூன்றாம் முறையாக உலக கோப்பை வென்றால் அதன் மூலம் நமது நாட்டின் பொருளாதாரம் உயர்ந்து விடுமா, பண வீக்கம் குறைந்து விடுமா, விவசாயிகளின் பிரச்சனைகள் தீர்ந்து விடுமா. நாம் மற்ற அனைத்து விளையாட்டுக்களை விட கிரிக்கெட்ட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து விட்டோம். தடகள பிரிவில் ஐந்து தங்கம், ஆறு வெள்ளி, ஒரு வெண்கலம் என்று asian games சில் வென்ற சாந்தியை பொம்பளையே கிடையாதுனு ஒரு கூட்டம் சொல்லித்தே ஏன்? சாந்தியின் வாழ்க்கையை வெய்த்து தானே சிவ கார்த்திகேயன் நடித்த எதிர் நீச்சல் படம் எடுக்கப்பட்டது. குற்றாலீஸ்வரன் திறமை சரியாக அங்கீகரிக்கப்பட்டு இருந்தால் அவர் மூலம் பல தங்கங்கள் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு கிடைத்து இருக்கும். ஆனால் அங்கீகரிக்கப்படவில்லை. சாந்தி, குற்றாலீஸ்வரன் போன்ற திறமையான வீர, வீராங்கனைகள் இரண்டு தவறுகளை செய்துள்ளார்கள். அவர்கள் ஆதிக்க ஜாதியில் பிறக்காதது முதல் தவறு, கோடீஸ்வரனுக்கு மகனாக, மகளாக பிறக்காதது இரண்டாம் தவறு.
2008 சைனாவில் நடந்த ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் போட்டியில் அபினவ் பிந்த்ரா தனி நபர் பிரிவில் தங்கம் வென்றாரே அது சாதனை. கிரிக்கெட்டில் வெல்ல திறமை மட்டும் அல்ல. அதிர்ஷ்டமும் வேண்டும். ஆனால் குறி பார்த்து சுடுதலில் வெல்ல திறமை மட்டுமே தேவை. ஒலிம்பிக்கில் தனி நபர் பிரிவில் இந்தியா பெற்ற முதல் தங்கம் அது. நடிகர் தலை வாசல் விஜய்யின் மகள் ஜெய வீணா தேசிய அளவில் நடந்த நீச்சல் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். ஷிவானி எண்ணும் மூன்று வயது பெண். வில் வித்தையில் பல வித்தைகள் செய்கிறார். லிம்கா புத்தகத்தில் இடம் பெற்ற சாதனை பெண்.
கிரிக்கெட்டில் இந்தியா தோற்றதை நினைத்து கவலைப்படுவதை விட இனி ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு ஒளி மயமான எதிர்காலம் இருக்கிறது என்று நினைத்து ஆனந்தப்படுங்கள். மற்ற விளையாட்டை போல் கிரிக்கெட்டும் ஒரு விளையாட்டு அவ்வளவே. கிரிக்கெட் ரசிகனாக இருங்கள். ஆனால் வெறியனாக இருக்காதீர்கள்.
தோற்றது ஒரு அணியே ஒழிய நாடு அல்ல.

No comments:
Post a Comment